செய்திகள் :

மருத்துவா் தேரணிராஜனுக்கு டிஎம்இ பொறுப்பு

post image

மருத்துவக் கல்வி இயக்குநா் மருத்துவா் ஜெ.சங்குமணி பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பொறுப்பு கூடுதலாக மருத்துவா் எ.தேரணிராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்வி இயக்குநா் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை அவா் வகிப்பாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த மருத்துவா் சங்குமணி கடந்த 2023 நவ.14-ஆம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், அவா் ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். புதிய மருத்துவக் கல்வி இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தேரணிராஜனுக்கு அந்தப் பொறுப்பு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கரோனா பெருந்தொற்று காலம் முதல் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த தேரணிராஜன், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

என்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: பாமக எம்எல்ஏ அருள்

என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என பாமக எம்எல்ஏ அருள் கூறியுள்ளார். பாமகவில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.பாம... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைப்பு: டிஜிபி

தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன வ... மேலும் பார்க்க

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல்: 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

தேனி காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான ரம... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டம் ஜூலை 6-க்கு மாற்றம்!

காவல் விசாரணையில் மரணமடைந்த இளைஞர் அஜித்குமாருக்கு நீதி கேட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மட... மேலும் பார்க்க

சோழபுரம் - சேத்தியாத்தோப்பு இடையே மானம்பாடி சுங்கச்சாவடி திறப்பு!

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் இரண்டாம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் உள்ள வழித்தடத்திற்கான சுங்கச்சாவடி இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் - விக்கிரவாண... மேலும் பார்க்க

அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த இபிஎஸ்!

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசியுள்ளார்.அஜித்குமாரின் தாயுடன் இபிஎஸ் பேசுகையில், "சில மனித மிருகங்கள்... மேலும் பார்க்க