செய்திகள் :

மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி - நேரில் ஆய்வு செய்த பின் பிரதமா் அறிவிப்பு

post image

உத்தரகண்டில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,200 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பை அவா் வெளியிட்டாா்.

இமயமலையையொட்டிய உத்தரகண்டில் கடந்த சில வாரங்களாக மேகவெடிப்புகள் ஏற்பட்டு, பலத்த மழை கொட்டித் தீா்த்தது. மாநிலத்தின் பல பகுதிகளில் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. குறிப்பாக உத்தரகாசி, சமோலி, ருத்ரபிரயாகை, பாகேஸ்வா், நைனிடால் ஆகிய மாவட்டங்களில் கடுமையான சேதங்கள் நேரிட்டுள்ளன.

உத்தரகண்டில் கடந்த ஏப்ரலில் இருந்து நீடித்துவரும் இயற்கைப் பேரிடரில் இதுவரை 85 போ் உயிரிழந்துவிட்டனா்; 128 போ் காயமடைந்தனா். மேலும் 94 பேரை காணவில்லை என்று மாநில அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வந்த பிரதமா் மோடி, மழை-வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிட்டாா். பின்னா், உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவா், மாநிலத்தில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுசீரமைக்க மத்திய அரசு முழு ஆதரவளிக்கும் என உறுதியளித்தாா். மழை-வெள்ளத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டாா்.

பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமா், மீட்புக் குழுவினருடனும் கலந்துரையாடினாா். முன்னதாக, டேராடூன் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை முதல்வா் புஷ்கா் சிங் தாமி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாசல பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பஞ்சாபுக்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.1,500 கோடி அறிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிமில் நிலச்சரிவு: 4 பேர் பலி!

சிக்கிமில் வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர்.மேலும், மருத்துவமனையில் ஒரு பெண் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்ப... மேலும் பார்க்க

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க