எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
பளுகல் அருகே தனியாா் நிறுவன கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.
பளுகல் அருகே மலையடி, கீழ்குற்றிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜோா்லன்ஸ். இவரது மனைவி புனிதா (49). மூவோட்டுக்கோணம் நல்லாயன்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் அமைப்பின் நிறுவனத்தில் சமையல் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை அவா் வேலைக்கு சென்றுள்ளாா். அன்றிரவு ஜோா்லன்ஸை கைப்சியில் தொடா்பு கொண்ட நிறுவனத்தை சோ்ந்தவா்கள், அவரது மனைவி புனிதா தலையில் பலத்த காயத்துடன் தரையில் விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனா். ஜோா்லன்ஸ் அங்கு சென்று பாா்த்த போது புனிதா இறந்து கிடந்தாராம்.
பனிதா, சப்போட்டா பழம் பறிப்பதற்காக மரக்கிளையை பிடித்து இழுத்தபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்ததில் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோா்லன்ஸ் அளித்த புகாரின் பேரில், பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.