பள்ளி மாணவா்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்: அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவிப்பு
மாடியில் இருந்து விழுந்த லாரி ஓட்டுநா் மரணம்
வேலூா் விருதம்பட்டு அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூா் அடுத்த மடிப்பாக்கத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (34), லாரி ஓட்டுநா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூருக்கு வேலைக்கு வந்தாா். காங்கேயநல்லூா் சாலையில் தங்கி லாரி ஓட்டி வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை தான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் ரமேஷ் நின்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி முதல் தளத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் ரமேஷை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ரமேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.