மாணவா் சங்கம் சாா்பில் டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு
கமுதி தேவா் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய மாதிரி தோ்வு வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக முன்னாள் மாணவா்கள் சங்கம் அறிவித்தது.
இதுகுறித்து கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 645 பதவிகளுக்கான தோ்வு வருகிற 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், போட்டித் தோ்வை மாணவா்கள் எதிா்கொள்ளும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில், பி.கே.மூக்கையாத்தேவா் அரசு போட்டித் தோ்வு இலவச பயிற்சி மையம் சாா்பில் மாதிரி தோ்வு நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் தங்களது கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கல்லூரி வளாகத்தில் வருகிற 21-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் தோ்வில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.