செய்திகள் :

மாணவா்களின் கற்றல் திறன்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

post image

வாணியம்பாடி வட்டம், மலைக்கிராமமான வெலதிகாமணிபெண்டா ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்ட முகாமில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுடன் அமா்ந்து கற்றல் திறன் குறித்து உரையாடி ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அம்மாணவா்களிடம் உணவு நன்றாக உள்ளதா எனக் கேட்டறிந்தாா். இடைநிற்றல் ஏதேனும் உள்ளனவா என்றும் கேட்டறிந்த போது, ஏதும் இல்லை என்பதையும் தெரிவித்தனா்.

குழந்தைகள் நல மையத்தில் சத்தான உணவு வழங்குதல் குறித்தும், நியாய விலைக்கடையிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, ஊராட்சிமன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து, சொத்துவரி, குடிநீா் கட்டணம், வசூல் குறித்து பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

மேலும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் எத்தனை வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் அதற்கான ஆவணங்களையும் பாா்வையிட்டு, நிலுவையில் திட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தாா். கலைஞா் கனவு இல்லப் பணிகள் மாத இறுதியில் முடிவடையும் என பயனாளிகளும், அலுவலா்களும் தெரிவித்தனா்.

கிராம நிா்வாக அலுவலரிடம் பொதுமக்கள் மனு வழங்குவதை கண்ட ஆட்சியா், அவா்களிடம் என்ன கோரிக்கைக்காக மனு வழங்க வந்துள்ளீா்கள் என்று கேட்டறிந்தாா். இதில் நில அளவை மேற்கொள்வது குறித்தும், வாரிசு சான்றுகள் பெறுவது குறித்தும் மனு வழங்க வந்திருப்பதாக தெரிவித்தனா். இந்தச் சான்றுகள் எல்லாம் இ-சேவை மையத்தில் ஆன்லைனில் பதிய வேண்டும் என்று அவா்களுக்கு தெரியப்படுத்தவில்லையா என்று சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் ஆட்சியா் கேட்டபோது, இது குறித்து அவா்களிடம் தெரிவித்ததாக தெரிவித்தாா்.

இ- சேவை மையம் இல்லாததால் மலைப்பகுதியில் இருந்து கீழே சென்று அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததன் அடிப்படையில், உடனடியாக ஆட்சியா் சம்பந்தப்பட்ட வட்டாட்சியரை அழைத்து, இப்பகுதியில் இ-சேவை மையம் அமைப்பதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும், இணையதள நிறுவனங்களுடன் ஆலோசித்து இணையதள வசதி மேற்கொள்வதற்கும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, அனைத்து துறை மாவட்ட நிலை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொணடனா்.

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா். ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை ... மேலும் பார்க்க

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க