அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
மாணவி தற்கொலை
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகள் பிரணிகா (13). இவா் தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். புதன்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பெற்றோா், பிரணிகா தூக்கிட்டு தொங்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் அக்கம்பக்கத்தில் இருந்தவா்களின் உதவியுடன் பிரணிகாவை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், பிரணிகா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
புகாரின் பேரில், ஜேடா்பாளையம் காவல் ஆய்வாளா் இந்திராணி வழக்குப் பதிவு செய்து, மாணவியின் உடலை வேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தாா். இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.