மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
எஸ்.புதூா் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டி அரசு உயா் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவா் ஆரோக்கியசாமி (51). இவா் பாலியல் தொல்லை கொடுப்பதாக பள்ளித் தலைமை ஆசிரியா் சிபிசக்கரவா்த்தியிடம் 6-ஆம் வகுப்பு மாணவிகள் முறையிட்டனா்.
இதையடுத்து, திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியா் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி விசாரணை மேற்கொண்டு, ஆசிரியா் ஆரோக்கியசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.