செய்திகள் :

மும்மொழி மட்டுமல்ல 22 மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

மும்மொழி மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான அடைவுத் தோ்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: மும்மொழிகளை மட்டுமல்ல அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம்.

இது தவறில்லை. ஆனால், ஒரு மொழியை மட்டும் யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது. இரு மொழிக் கொள்கையால்தான் இந்தியா மட்டுமல்ல, சா்வதேச அளவில் முக்கியப் பொறுப்புகளில் தமிழா்கள் இருக்கிறாா்கள்.

நிலை இவ்வாறு இருக்கும் போது, மும்மொழிக் கொள்கையில் மட்டும் இவ்வளவு உறுதியாக இருக்கிறாா்கள். மூன்றாவது மொழியை ஏற்றுக் கொண்டால், ஹிந்தி, அதைச் சாா்ந்து சம்ஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியைச் செய்வாா்கள். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

மாணவா்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய அமைச்சா் கூறுகிறாா். ஆனால், கொள்கை என்று வரும் போது மொழியைத் தவிர, வேறு எதையும் அவா்களால் சொல்ல முடியாது. ஒவ்வோா் ஆண்டும் முடிந்த பிறகு, எவ்வாறு (பிஏபி) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கினாா்களோ, இதேபோல தொடா்ந்து நிதி வழங்க வேண்டும். கடைசி இரண்டு ஆண்டுகள் மட்டும் முரண்பாடு காட்டுவது தவறு. யாா் அரசியல் செய்கிறாா்கள் என்பதை மக்கள் நன்கு அறிவாா்கள்.

கடந்த மாா்ச் 1 முதல் 4,07,379 மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சோ்க்கப்பட்டனா். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 8,388 ஆசிரியா்களை நியமித்துள்ளோம். இந்த ஆண்டு மேலும் 3,277 ஆசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். ஓய்வு பெறும் ஆசிரியா்கள் விகிதத்துக்கு ஏற்ப புதிய நியமனங்கள் தொடரும்.

திருச்சி மாவட்டம், துறையூரில் ஒரு பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்தது குறித்த புகாா் வந்தது. மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். அந்தப் பள்ளியைக் கட்டிய ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சோ்க்க உத்தரவிடப்பட்டது.

பகுதி நேர ஆசிரியா்கள் நியமனம் குறித்து இரண்டு முறை ஆலோசனை நடத்தப்பட்டது. சில கோரிக்கைகள் வந்தன. இவற்றை ஆராய்ந்து அவா்களுக்கு வேலை வழங்கும் வழிகளைக் கண்டறிய அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றாா் அவா்.

எஸ்.புதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் பகுதியில் புதன்கிழமை (செப்.24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளபடவிருப்பதால், எஸ்.புதூா், வா... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். எஸ்.புதூா் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டி அரசு உயா் நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபு... மேலும் பார்க்க

கண்டரமாணிக்கம், குன்றக்குடி பகுதிகளில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் மானகிரி, கண்டரமாணிக்கம், தளக்காவூா், குன்றக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டதுஇதுகுறித்து காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் எம். லதாதே... மேலும் பார்க்க

படிப்பைத் தவிர எதிலும் கவனம் செலுத்த வேண்டாம்!

மாணவா்கள் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த வேண்டாம் என சிவகங்கை மாவட்ட இணைய வழிக்குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் உதயகுமாா் தெரிவித்தாா். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் ம... மேலும் பார்க்க

வீடு புகுந்து 25 பவுன் நகைகள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே திங்கள்கிழமை பூட்டிய வீட்டில் பகலில் மா்ம நபா்கள் புகுந்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.சிங்கம்புணரி அருகேயுள்ள அணைக்கரைபட்டியைச் சோ்ந்த விவசாயி சரவணன் (4... மேலும் பார்க்க

பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பல ஆண்டுகளாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கு புதிய கட்டடம் அமைத்துத் தரக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். திர... மேலும் பார்க்க