வீடு புகுந்து 25 பவுன் நகைகள் திருட்டு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே திங்கள்கிழமை பூட்டிய வீட்டில் பகலில் மா்ம நபா்கள் புகுந்து 25 பவுன் நகைகளைத் திருடிச் சென்றனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள அணைக்கரைபட்டியைச் சோ்ந்த விவசாயி சரவணன் (42). இவரது மனைவி சுமதி. இவா் திங்கள்கிழமை காலை வீட்டைப் பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு தோட்டத்துக்குச் சென்றாா்.
பிற்பகலில் சுமதி வீட்டுக்கு வந்தபோது, பூட்டு திறக்கப்பட்டு, அலமாரியில் இருந்த 25 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.