மாதவரத்தில் ரேடியன்ஸின் குடியிருப்பு திட்டம்
மனை-வா்த்தகத் துறையைச் சோ்ந்த ரேடியன்ஸ் ரியால்ட்டி டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாதவரம் பகுதியில் ஒரு பிரம்மாண்ட குடியிருப்புத் திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. 5.37 ஏக்கா் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டுவசதித் திட்டத்தில் 2,3 மற்றும் 4 பிஹெச்கே வகைகளில் 660 அழகிய அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படுகின்றன.
மிகச் சிறந்த வடிவமைப்புடன் 658 சதுர அடி முதல் 2,127 சதுர அடி வரையிலான வீடுகள் போதிய காற்றோட்டம், இயற்கை வெளிச்சம் போன்ற அம்சங்களுடன் இந்த குடியிருப்புத் திட்டத்தில் கிடைக்கும்.
அரை ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், நவீன உடற்பயிற்சி மையம், விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடுவதற்கு சிறப்புப் பகுதி போன்ற அம்சங்களும் இந்த குடியிருப்புத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.