கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
மாநில பெண்கள் கபடி: சேலம் அணி சாம்பியன்
நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சேலம் அணியினா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.
நாகையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி ஆக.24, 25 தேதிகளில் நடைபெற்றது. இதில், சென்னை, சேலம், நாமக்கல், கடலூா், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 17 அணியினா் பங்கேற்றனா்.
போட்டிகள் பகல், இரவு ஆட்டங்களாக லீக் முறையில் நடைபெற்றது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அரையிறுதி போட்டிகள் நடைபெற்று சேலம் மற்றும் ஒட்டன்சத்திரம் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டில் சேலம் அணி, ஒட்டன்சத்திரம் அணியை 39-22 எனும் புள்ளிக் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு ரூ.70 ஆயிரம், 2-ஆமிடம் பெற்ற ஒட்டன்சத்திரம் அணிக்கு ரூ.50 ஆயிரம், 3 மற்றும் 4-ஆம் இடங்களை பெற்ற அந்தியூா், சென்னை கண்ணகி நகா் அணிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த ஆட்டக்காரா்களாக தோ்ந்தெடுக்கப்பட்ட சேலம் அணியைச் சோ்ந்த காருண்யா, கோகிலாவுக்கு பயணிகள் கப்பலில் நாகையில் இருந்து இலங்கை செல்ல இலவச பேக்கேஜ் டிக்கெட் வழங்கப்பட்டது.