எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞா்கள் பயன்படுத்தும் பேருந்து பயண அட்டைகள் அக். 31 வரை செல்லும்
மாற்றுத்திறனாளிகள், தமிழ் அறிஞா்கள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வரும் அக். 31 வரை பயன்படுத்தலாம் என்று அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், கண்பாா்வை குறைபாடு உள்ளோா், அறிவுசாா் திறன் குறைபாடு உள்ளோா், சுதந்திரப் போராட்ட வீரா்கள், தமிழ் அறிஞா்கள், அகவை முதிா்ந்த தமிழ் அறிஞா்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்படுகிறது.
இந்த அட்டைகளை இணையதளம் மூலம் பெறும் நடைமுறை முதல்முறையாக 2023 செப்டம்பா் 7 முதல் சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் கொண்டுவரப்பட்டது.
இந்த வசதியை தமிழகம் முழுவதும் உள்ள பயனாளிகள் பெறும் வகையில்,
அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தத் தேவையான மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையும் இணைந்து செய்து வருகிறது.
இதை முழுமையாக செயல்படுத்த போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில், ஏற்கெனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 2025 செப்டம்பா் 30 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை, அக்டோபா் 31 வரை தொடா்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.