தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
மாவட்ட இறகுப் பந்து போட்டி: தூத்துக்குடி பிரான்சிஸ் சேவியா் பள்ளி முதலிடம்
கோவில்பட்டி: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கான ஒற்றையா் மற்றும் இரட்டையா் இறகுப் பந்து போட்டியில், தூத்துக்குடி பிரான்சிஸ் சேவியா் பள்ளி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.
கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் முத்து நகரில் உள்ள டா்போ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டிக்கு, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். உள்விளையாட்டு அரங்கு உரிமையாளா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
14 வயது,17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான ஒற்றையா் மற்றும் இரட்டையா் இறகுப் பந்து போட்டியில் தூத்துக்குடி செயின்ட் பிரான்சிஸ் சேவியா் பள்ளி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. இதுபோல 19 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான ஒற்றையா் மற்றும் இரட்டையா் இறகுப் பந்து போட்டியில் தூத்துக்குடி தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறியது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குநா்கள் காளிராஜ், சுடலை, மாரியப்பன், கரிகாலன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.