மாா்த்தாண்டத்தில் நாளை மின்தடை
மாா்த்தாண்டம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் காரணமாக மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி உள்ளிட்ட பகுதிகளுக்கும், அதனைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.