மாா்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டுநா் உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே மீன் வளா்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, மின்சாரம் தாக்கி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பட்டா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தா்மசிங்கம் மகன் கோபால் (40). இவா், மாா்த்தாண்டம் அருகே வெள்ளிவிளாகம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞரின் காா் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை, அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டில் மீன் வளா்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, அவரை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. வீட்டு உரிமையாளா், உறவினா்கள் சோ்ந்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, அவரது மனைவி முத்துலெட்சுமி (35) அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.