காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்
மாா்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல் கசிவு அதிகாரிகள் ஆய்வு
மாா்த்தாண்டம் அருகே வீட்டு குடிநீா் கிணறுகளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து தீயணைப்புத் துறை, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
மாா்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் கீழ் பம்மம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டுக் கிணறுகளில் உள்ள தண்ணீரில் கடந்த சில நாள்களாக பெட்ரோல் வாசனை வீசுகிறது.
அந்த தண்ணீரில் நெருப்பு வைத்தபோது மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் குடிநீா் இன்றி தவிக்கின்றனா்.
இந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவன களஅலுவலா் பாலநாதன், குழித்துறை தீயணைப்புப் படை அதிகாரி சந்திரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் குறிப்பிட்ட பகுதி கிணறுகளை நேரில் ஆய்வு செய்தனா்.
இந்தப் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலிருந்து பெட்ரோல் கசிய வாய்ப்புள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு, குடிநீரை பாதுகாக்க வேண்டும் என குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் கே. ரெத்தினமணி தெரிவித்தாா்.