மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
மினி லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூா் அருகே மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி மூா்த்தி (55). இவா் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ஆம்பூா் நோக்கி வந்தாா். ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியருகே வந்தபோது, பின்னால் வந்த மினிலாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆம்பூா் நகர போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.