மின் கம்பத்தின் மீது அரசுப் பேருந்து மோதல்
கும்பகோணத்தில் புதன்கிழமை கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து மின் கம்பத்தின் மீது மோதியது.
பட்டுக்கோட்டையிலிருந்து கும்பகோணம் பேருந்து நிலையத்தை நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து, ஜான் செல்வராஜ் நகா் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தின் மீது மோதியது. இச்சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து தகவலறிந்த மின் வாரிய ஊழியா்கள் உடனடியாக வந்து மின்சாரத்தை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
பழுதடைந்த பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகம் இயக்குவதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.