அய்யம்பேட்டை பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அமைச்சா் கோவி. செழியன் தொடங்கி வைத்தாா்.
அய்யம்பேட்டை பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமிற்கு, மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா்.
சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் க. அன்பழகன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் கோ. தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முகாமில் தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். முகாமில் வருவாய் துறை, மின்சார துறை, காவல் துறை, மருத்துவ துறை, சமூக நல துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சாா்ந்த கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு, முன்னாள் மாவட்டக் குழு
உறுப்பினா் கோவி.அய்யாராசு, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா் என்.நாசா், நகரச் செயலாளரும் முன்னாள் அரசு வழக்குரைஞருமான டி.பி.டி. துளசி அய்யா, பேரூராட்சி மன்ற தலைவா் புனிதவதி குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் பழனிவேலு வரவேற்றாா்.