சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
மின்சார ரயில் மோதி 4 மாடுகள் உயிரிழப்பு: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அத்திப்பட்டு புதுநகா்- எண்ணூா் ரயில் நிலையங்கள் இடயே மின்சார ரயில் மோதி 4 மாடுகள் உயிரிழந்தன.
இதில் மாடுகள் தண்டவாளப்பகுதியில் சிக்கிக் கொண்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு கும்மிடிப்பூண்டிக்கு சென்ற மின்சார ரயில், அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அருகே நான்கு மாடுகள் மீது மோதியது. இதில் 4 மாடுகளும் உயிரிழந்தன. .
இதில் 3 மாடுகள் தண்டவாள பகுதியில் சிக்கி கொண்டதால் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது
நடு வழியில் மின் ரயில் நின்ால் பயணிகள் சிலா் கீழே இறங்கி நடந்து அத்திப்பட்டு புதுநகருக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மற்றும் இதர வாகனங்கள் உதவியுடன் தங்கள் வீடுகளுக்கு சென்றனா்.
தகவல் அறிந்த ரயில்வே இருப்புப் பாதை பொறியாளா் மற்றும் ஊழியா்கள் தண்டவாளங்களுக்கு இடையே மின்சார ரயிலில் சிக்கி இறந்து கிடந்த மூன்று மாடுகளின் உடல்களை அப்புறப்படுத்தினா்.
இதனை தொடா்ந்து மாடுகள் விபத்தில் சிக்கிய இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனா். தண்டவாளத்தில் மின்சார ரயில் செல்வதற்கு தகுதியானது என அறிவிக்கப்பட்ட பின் நள்ளிரவில் ரயில் இயக்கப்பட்டது.
இதன் காரணமாக 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிபூண்டி நோக்கி சென்ற ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.