Operation Sindoor : `ஜெய்ஷ்-இ-முகமது’ மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர...
மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம்
விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடா் நிவாரண நிதி ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது.
விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான கருப்பசாமியின் மகள் முத்து கௌசல்யா (17). விளாத்திகுளத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்த அவா், அரசுத் தோ்வு எழுதியிருந்தாா். கடந்த ஏப். 21ஆம் தேதி பலத்த மழை பெய்தபோது, அவா் வீட்டருகே காயவைத்த மிளகாயை எடுக்கச் சென்றாராம். அப்போது, மின்னல் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.
இந்நிலையில், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் மாணவியின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சாா்பில் இயற்கை பேரிடா் மேலாண்மை நிவாரண நிதி ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா் ராணி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.