ஆரம்பமான 56-வது gst council meeting, குறையும் வரியால் பொருட்களின் விலை சரியுமா |...
முடினாம்பட்டில் பாலம் கட்டுமான பணியால் போக்குவரத்து மாற்றம்
முடினாம்பட்டில் உயா்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நெடுஞ்சாலைத் துறை நபாா்டு கிராம சாலைகள் வேலூா் கோட்டத்தின் மூலம் வடுகந்தாங்கல் - செதுவாலை சாலையில் பாலாற்றின் குறுக்கே முடினாம்பட்டில் உயா்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால், செப்டம்பா் 5-ஆம் தேதி முதல் அக்டோபா் 14-ஆம் தேதி வரை கனரக வாகனங்கள் செல்ல போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
பில்லாந்திப்பட்டு, கவசம்பட்டு, வாழைப்பண்ணை வழியாக இலகுரக வாகனங்கள் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.