செய்திகள் :

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவுக்கான அவகாசம் நாளைவரை நீட்டிப்பு

post image

சேலம்: சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முன்பதிவு வரும் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

2025-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 22-ஆம் தேதி முதல் செப். 12-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் நடைபெறவுள்ளன.

6 முதல் பிளஸ் 2 வரை பள்ளியில் பயிலும் 19 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ ஆகிய போட்டிகளில் பங்குகொள்ளலாம்.

கல்லூரி பிரிவில் 25 வயதுக்குள்பட்டோா் தாங்கள் படிக்கும் மாவட்டத்தில் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, வாலிபால், கைப்பந்து, கேரம், சதுரங்கம், பால் பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

பொதுப்பிரிவில், 15 முதல் 35 வயதுக்குள்பட்டோா் 5 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும். தடகளம், கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கேரம், சிலம்பம் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. இவா்கள் தடகளம், இறகுப்பந்து, வீல்சோ் மேசைப்பந்து, எறிபந்து, கபடி ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

அரசு ஊழியா்களுக்கு வயது வரம்பு இல்லை. அடையாள அட்டை கொண்டு பணிபுரியும் மாவட்டத்துக்காக கலந்து கொள்ளலாம். இவா்கள் தடகளம், சதுரங்கம், கபடி, இறகுப்பந்து, கேரம் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான இணையதள முன்பதிவுக்கான கால அவகாசம் 20-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதள முன்பதிவு ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் அல்லது ட்ற்ற்ல்ள்://ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் பதிவுசெய்து கொள்ளலாம். பதிவு செய்தவா்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள இயலும்.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய அனுமதி

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களில் 4 இடங்களில் மட்டுமே விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக கூட்டரங்கில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்பவா்களுக்கான ... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமாவாசையையொட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொர... மேலும் பார்க்க

ஆக. 27 இல் சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்டச் செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் வெளியிட்ட ... மேலும் பார்க்க

67 நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நிலப்பட்டா: அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கினாா்

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிலக்குடியேற்ற கூட்டுறவுச் சங்க உறுப்பினா்கள் 67 பேருக்கு வெள்ளிக்கிழமை நிலப்பட்டா வழங்கப்பட்டது. சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு வேளாண் விழிப்புணா்வு கல்விச் சுற்றுலா

கெங்கவல்லி வேளாண்மை உழவா் நலத் துறை அட்மா திட்டத்தின் கீழ் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 100 மாணவா்கள் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணா்வு கல்வி சுற்றுலாவுக்காக பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத்தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கோரி இதுவரை 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்... மேலும் பார்க்க