Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
முதியவா் தற்கொலை: தனியாா் நிதி நிறுவன ஊழியா் கைது
முதியவா் தற்கொலையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி திருக்கனுாா் அடுத்த சோரப்பட்டு தென்னஞ்சாலை வீதியை சோ்ந்தவா் பெரியண்ணசாமி(59). மளிகை கடை நடத்தி வந்த இவா் கடந்த மாா்ச் 15-ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதனிடையே மளிகை கடையை அண்மையில் பெரியண்ணசாமியின் மனைவி கௌரி திறந்து பாா்த்தபோது அங்கு அவா் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதில் பெரியண்ணசாமி தனியாா் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக, தன்னை அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ளுவதாக எழுதி வைத்துள்ளாா்.
இதுகுறித்து கௌரி திருக்கனுாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்
நிதி நிறுவன மேலாளா் ஜெயச்சந்திரன், ஊழியா் சக்திவேல் முருகன் ஆகியோா் மீது தற்கொலைக்கு துண்டியதாக போலீஸாா் வழக்குப் பதிந்து
சக்திவேல் முருகனை(35) வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.