சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
முத்தூா் அருகே நூற்பாலையில் தீ விபத்து
முத்தூா் அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.
வெள்ளக்கோவில் கல்லாங்காட்டுவலசைச் சோ்ந்த அரவிந்த் (45), முத்தூா் தண்ணீா்பந்தலில் நூற்பாலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இயங்கிக்கொண்டிருந்த ஆலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தொழிலாளா்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
அதற்குள் நூற்பாலையில் இருந்து பஞ்சு, நூல்கள் மற்றும் கட்டட மேற்கூரை ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதில், ரூ.பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.