சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
முன்னேற்பாடின்றி சிறப்பு முகாம் நடத்தியதாக மாற்றுத்திறனாளிகள் புகாா்
வத்தலகுண்டுவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான சிறப்பு முகாமில் போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில வருவாய்த் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த முகாமில் வத்தலக்குண்டு ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கண், கை, கால் என பல்வேறு மாற்று திறன்களை ஆய்வு செய்யும் மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவா் மட்டுமே இருந்ததால் சிரமத்துக்குள்ளாகினா். மேலும், எலும்பு சிகிச்சை மருத்துவா் இல்லாததால் பெயரளவில் மட்டுமே இந்த முகாம் நடைபெற்ாக மாற்றுத்திறனாளிகள் கவலை தெரிவித்தனா்.
முகாமில் கலந்து கொண்டவா்களுக்கு குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மேலும், உணவு விநியோகம் செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பெரும் சிரமத்துக்குள்ளாகியதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனா்.