செய்திகள் :

``மும்பை தாக்குதலுக்கு இப்படித்தான் நாள் குறித்தோம்..'' - விசாரணையில் தஹாவூர் ராணா பகீர்

post image

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி தஹாவூர் ராணா

மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி தஹாவூர் ராணா என்பவன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான்.

மோடி - ட்ரம்ப் சந்திப்பு:

அவனை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இந்தியா தொடர்ந்து அமெரிக்காவிடம் நிர்ப்பந்தம் செய்து வந்தது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்று அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்போது, ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.

ஆனால், ராணா தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்த தடை விதிக்கவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தார். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் சிறப்பு விமானத்தில் ராணா இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டான்.

NIA தீவிர விசாரணை:

அவனை டெல்லியில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. ராணாவிடம் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கு, ராணாவின் கூட்டாளி டேவிட் ஹெட்லிக்கு உள்ள தொடர்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

என்.ஐ.ஏ (NIA)

விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன் படி மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்ட லஷ்கர் இ தொய்பா, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் டேவிட் ஹட்லி ஆகியோர் தாக்குதல் நடத்துவதற்கு குறிப்பிட்ட நாளை முடிவு செய்து வைத்திருந்தனர். அந்த நாளில் கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது என்றும், எனவே தாக்குதல் திட்டத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்ததாக ராணா குறிப்பிட்டுள்ளான்.

டேவிட் ஹெட்லிதான் ராணாவை தொடர்பு கொண்டு கடல் சீற்றம் சரியாகும் வரை தற்காலிகமாக தாக்குதல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளான்.

தஹாவூர் ராணா - டேவிட் ஹட்லி சதித்திட்டம்:

மும்பை தாக்குதல் குறித்து தனக்கு முழுமையாக தெரியும் என்றும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத தலைவர்களுக்கு எந்த அளவுக்கு தாக்குதல் குறித்த தகவல் தெரியுமோ அந்த அளவுக்கு தாக்குதல் தொடர்பான தகவல் தனக்கு தெரிந்திருந்தது என்று ராணா விசாரணையில் தெரிவித்துள்ளான். அவன் கூறிய தகவலை அமெரிக்க விசாரணை அமைப்பும் உறுதிபடுத்தியது.

மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் டேவிட் ஹட்லி இந்தியாவிற்கு வந்து பார்த்துவிட்டு 2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்று 6 வாரம் தங்கியுள்ளான். மே மாதம் ராணாவை டேவிட் ஹட்லி சந்தித்து மும்பை தாக்குதல் குறித்து ஆலோசனை செய்துள்ளான்.

அப்போது தாக்குதல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக ராணாவிடம் டேவிட் ஹட்லி தெரிவித்துள்ளான். மேலும் மும்பையில் உள்ள தாஜ்மகால் பேலஸ் ஹோட்டலையும் தாக்க லஷ்கர் இ தொய்பா விரும்புவதாக ராணாவிடம் டேவிட் தெரிவித்துள்ளான்.

மும்பை தாக்குதல்

பலத்த பாதுகாப்புடன் விசாரணை

அனைத்து தகவல்களையும் ராணாவிடம் டேவிட் ஹட்லி தெரிவித்தபோதும், அமெரிக்க அதிகாரிகளிடம் தனக்கு மும்பை தாக்குதல் குறித்து எதுவும் தெரியாது என்று ராணா தெரிவித்துள்ளான்.

இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த ஒவ்வொரு தகவல் குறித்தும் ராணாவிடம் விசாரித்து வருகின்றனர். தினமும் ராணாவிடம் அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணா தற்போது அடைக்கப்பட்டு இருக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரானா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவனை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`இருட்டுக்கடையைக் கேட்டு கொடுமை செய்கிறார்கள்' - கணவர் வீட்டார் மீது புதுமணப்பெண் வரதட்சணை புகார்!

``இருட்டுக்கடை அல்வா கடையை தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொரு பெண்ணுடன் குடித்தனம் நடத்துவேன்" என தன் கணவர் மிரட்டியதாக புதுமணப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ... மேலும் பார்க்க

போதைப்பொருளை கடலில் போட்டு தப்பிய கடத்தல் கும்பல்; 300 கிலோ மீட்பு.. குஜராத்தில் நடந்தது என்ன?

குஜராத் கடல் பகுதியில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தி வரப்படுவது வழக்கமாக இருக்கிறது. குஜராத் கடல் பகுதி மட்டுமல்லாது குஜராத் துறைமுகத்திற்கும் வெளிநாட்டில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை... மேலும் பார்க்க

இன்ஸ்டா வீடியோவில் காதல்; துப்பட்டாவால் கொலை செய்யப்பட்ட கணவன் - ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானாவில் உள்ள பிரேம் நகரில் வசிப்பவர் ரவீனா(32). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி யூடியூப் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிட ... மேலும் பார்க்க

Ooty: அனுமதியோ 40 மரங்களுக்கு, வெட்டிக் கடத்தப்பட்டதோ 250 மரங்கள்! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் பேரூராட்சி உட்பட்ட மணிக்கல் பகுதியில் அமைந்திருக்கிறது கழிவு மேலாண்மை கூடம். நீலகிரி தைல மரங்கள் எனப்படும் யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் நாள்தோ... மேலும் பார்க்க

மழை ஈரப்பதம்: கட்டுமான பணியின்போது மண்சுவர் விழுந்து தொழிலாளி பலி! - கரூர் சோகம்

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பஞ்சமாதேவியைச் சேர்ந்த காளியப்பன் மகன் பொன்னுசாமி என்பவரது புதிய வீடு கட்டுமான பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் கரூர் உப்பிடமங்கலம் அருக... மேலும் பார்க்க

செருப்பால் அடித்த டெக்னீஷியன்; வெளுத்து வாங்கிய தூய்மை பணியாளர்கள்! - மருத்துவமனையில் நடந்தது என்ன?

அருப்புக்கோட்டையில் துப்புரவு பணியாளரை மருத்துவமனை‌ ஊழியர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க