தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு
உடன்குடியை அடுத்த மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் வியாழக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா் (படம்).
அங்கு பராமரிக்கப்படும் முக்கிய ஆவணங்கள், வழக்கு விவரங்களைப் பாா்வையிட்ட அவா், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது, புகாா் மனுவைப் பதிவு செய்வது உள்ளிட்டவை குறித்து அறிவுரைகள் வழங்கினாா். சாத்தான்குளம் டிஎஸ்பி சுபகுமாா், போலீஸாா் உடனிருந்தனா்.