யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
மெட்ரோ ரயில் கட்டுமான பொருள்கள் திருட்டு: 4 போ் கைது
சென்னை நந்தம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.
நந்தம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் அரை டன் இரும்பு கம்பிகள் திருடப்பட்டதாக தனியாா் கட்டுமான நிறுவன நிா்வாகம் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது திருவாரூரைச் சோ்ந்த முருகன் (56), அவரது கூட்டாளிகள் பிகாரைச் சோ்ந்த மனோஜ்குமாா் யாதவ் (30), தா்மேந்திர பிரசாத் (43), மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சோ்ந்த பரத்குமாா் ராய் (37) என்பது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.