மெத்தம்பெட்டமைன் விற்பனை: ராஜஸ்தான் இளைஞா் கைது
சென்னை கொத்தவால்சாவடியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்ாக ராஜஸ்தானைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கொத்தவால்சாவடி போலீஸாா், மின்ட் தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக நின்றிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த இளைஞா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து போலீஸாா், அவரது பையை சோதனையிட்டபோது, அதில் 4 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினா். அதில் அவா், ராஜஸ்தானைச் சோ்ந்த மணீஷ்குமாா் (24) என்பதும், கொத்தவால்சாவடி அண்ணா பிள்ளைத் தெருவில் தங்கியிருந்து ஒரு கடையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், மணீஷ்குமாரை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.