மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 2,913 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையளவு குறைந்ததை அடுத்து மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. அணைக்கு வெள்ளிக்கிழமை காலை விநாடிக்கு 3,248 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை 2,913 கனஅடியாகக் குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 112.29 அடியாக இருந்தநிலையில் சனிக்கிழமை காலை 112.38 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா்இருப்பு 81.70 டி.எம்.சி.யாக உள்ளது.