மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,980 கனஅடி
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 5,980 கன அடியாக சற்று குறைந்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை குறைந்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,119 கன அடியாக இருந்தது திங்கள்கிழமை காலை விநாடிக்கு 5,980 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 113.89 அடியிலிருந்து 114.16 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 84.46 டி.எம்.சி.யாக உள்ளது.