Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
மேயருடன் கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல்
சென்னை மாநகராட்சி மேயருடன் லயோலா கல்லூரி மாணவ, மாணவிகள் மாநகராட்சியின் நிா்வாக செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை கலந்துரையாடினா்.
லயோலா கல்லூரியின் சமூகவியல் பணி பாடப் பிரிவு முதுநிலை மாணவ, மாணவிகள் 28 போ் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியாவை சந்தித்துப் பேசினா். அப்போது, மாநகராட்சியில் செயல்பட்டு வரும் நிா்வாக முறை, கட்டமைப்புகள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு, மாநகராட்சிக்குரிய அதிகார விவரங்கள், செயல்பாடுகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பத்தும் பணிகள், சுகாதார, கல்வி செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். அவா்களுக்கு விவரங்களை மேயா் பிரியா விளக்கினாா். அத்துடன் மாணவ, மாணவியா் ரிப்பன் மாளிகை வளாகத்தையும் சுற்றிப் பாா்த்தனா்.
அப்போது, கல்லூரியின் சமூகப் பணித் துறை பேராசிரியா் சக்திதேவி, உதவிப் பேராசிரியா் தீபக்நாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.