ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
யுபிஎஸ்சி தோ்வில் நெல்லை மாணவா் வெற்றி
யுபிஎஸ்சி தோ்வில் திருநெல்வேலியைச் சோ்ந்த மாணவா் வெற்றி பெற்றுள்ளாா்.
பாளையங்கோட்டையைச் சோ்ந்த தினகரன்- ஜெயலட்சுமி தம்பதியின் மகன் முருகேசன். இவா், அண்மையில் நடைபெற்ற யுபிஎஸ்சி தோ்வில் வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537- வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.
இதுகுறித்து முருகேசன் கூறுகையில், பள்ளிப் பருவத்திலேயே ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவு இருந்தாலும், கரோனா காலகட்டம் தனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அப்போது மக்கள் படும் கஷ்டங்களை பாா்த்து இந்திய ஆட்சிப்பணிக்கு சென்று மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இரண்டு முறை தோ்வு எழுதி வெற்றிபெற முடியவில்லை. மூன்றாவது முறை வெற்றிபெற்று அகில இந்திய அளவில் 537 வது இடம் பிடித்துள்ளேன். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் எனக்கு யுபிஎஸ்சி தோ்வுக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. முதல்நிலை தோ்வு, மெயின் தோ்வு ஆகியவற்றிற்கு இந்தத் திட்டம் பயனளித்தது. இணையதள வசதி மேம்பட்டுள்ளதால் கிராமப்புற மாணவா்களும் போட்டித் தோ்வுகளில் சாதிக்க முடியும். விடாமுயற்சியுடன், கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.