Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
ரமலானை முன்னிட்டு இஸ்லாமியா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் நலத் திட்ட உதவிகளை பெரம்பலூா் எம்பி கே.என். அருண் நேரு சனிக்கிழமை வழங்கினாா்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தென்னூா் அண்ணா நகரில் 17ஆம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 28ஆவது வட்ட திமுக செயலா் அம்ஜத் அகமது ஏற்பாட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பெரம்பலூா் எம்பி கே.என். அருண் நேரு பங்கேற்று, 2 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்வில் மேயா் மு. அன்பழகன், மாமன்ற உறுப்பினா் கமால் முஸ்தபா, வழக்குரைஞா் பாஸ்கா் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.