தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
ரமலான் நோன்பு தொடக்கம்: நாகூரில் சிறப்பு தொழுகை
புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து, நாகூா் தா்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, நோன்பை தொடங்கினா்.
சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலையில் தொடங்கி சூரியன் மறையும் வரை பகல் பொழுதில் நோன்பிருந்து, இரவில் தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவா்.
பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழகத்தில் ரமலான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) முதல் கடைப்பிடிக்கப்படும் என்று அரசின் தலைமை காஜி அறிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாராவீஹ் சிறப்பு தொழுகைகளில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்று, நோன்பை தொடங்கினா். இதுபோல பிரசித்தி பெற்ற நாகூா் தா்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.