எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயிலில் அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளத்தில் இருந்து மேற்கு வங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி கோவையில் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடினாா்.
கேரள மாநிலம், பாலக்காடு அலநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (40). மேற்குவங்க மாநிலம், பிதன்நகா் கிழக்கு காவல் நிலைய போலீஸாரால், இவா் மீது அங்கு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் அங்கு தேடி வந்த நிலையில், அவா் சொந்தமாநிலமான கேரளத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாநில காவல் உதவி ஆய்வாளா் ராகேஷ் ராய் உள்ளிட்ட போலீஸாா் கேரளத்துக்கு வந்து அவரைக் கைது செய்தனா்.
இதையடுத்து, திருவனந்தபுரத்திலிருந்து ஷாலிமா் விரைவு ரயிலில் ஆனந்தனை போலீஸாா் அழைத்துச் சென்றனா். அந்த ரயில் கடந்த 27-ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் கோவை வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஆனந்தன் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியோடினாா். அவா்களை அந்த மாநில போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், போத்தனூா் இருப்புப் பாதை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா். இவா் குறித்து தகவல் தெரிந்தால், போத்தனூா் ரயில் நிலைய போலீஸாரை 94981- 80937 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸாா் அறிவித்துள்ளனா்.