செய்திகள் :

ரயில் விபத்து எதிரொலி: செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர்!

post image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், நேற்று(ஜூலை 8) காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். இந்த விபத்தில், சாருமதி (16), விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் கேட் கீப்பராக இருந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மாவின் கவனக்குறைவால்தான் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கருதிய மக்கள் அவரை சரமாரியதாகத் தாக்கினர்.

பலத்த காயமடைந்தவரை மீட்ட காவல் துறையினர் கைது செய்த நிலையில், ரயில்வே மேலாளர், பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவரை புதிய கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், செம்மங்குப்பம் பகுதிக்கு இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் புதிய கேட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Train accident: Gatekeeper from Tamil Nadu to Chemmankuppam!

இதையும் படிக்க : கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் சிறையில் அடைப்பு!

துணை மருத்துவ பட்டயப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

துணை மருத்துவ பட்டய படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 9) தொடங்கியுள்ளது. பாா்வை அளவியல், மருந்தியல் உள்பட 9 வகையான மருந்தியல் பட்டய படிப்புகளுக்கும், 13 வக... மேலும் பார்க்க

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கு: வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க மறுப்பு

கரும்பு அறுவடை இயந்திரங்கள் கொள்முதல் செய்த வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரை விடுவிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க