ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இளைஞா் தற்கொலை
வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.
ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சூரியநாராயணன் (20). மனநலம் பாதிக்கப்பட்ட இவா், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே கல்லத்திக்கிணறு செல்லும் சாலை அருகே உள்ள தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு படுத்த போது, அவ்வழியாகச் சென்ற கன்னியாகுமரி-நிஜாமுதீன் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தூத்துக்குடி ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.