வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்த...
ரஷியாவில் 337 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய உக்ரைன்!
ரஷியாவில் தாக்குதல் நடத்த உக்ரைனால் அனுப்பப்பட்ட 337 ட்ரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷியாவுடனான மூன்று ஆண்டுக்கால போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சவுதி அரேபியாவில் அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் ரஷியா மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷியாவின் எல்லையைச் சுற்றியுள்ள 10 பகுதிகளில் 337 ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது.
இதில், ஒருவர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியாவிற்கு வரும் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்!
கர்ஸ்க், மாஸ்கோ, பெல்கோரோட், ப்ரியன்ஸ்க், வோரோன்ஸே, கலுகா, ஒர்யோல் போன்ற பல பகுதிகளில் தாக்குதல் நடத்திய ட்ரோன்கள் அனைத்தையும் ரஷிய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்தத் தாக்குதலில் பல கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகள் சேதமடைந்தன. பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. இதுதொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் 6 விமான நிலையங்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் ரயில் நிலையங்களிலும் போக்க்குவரத்து சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், மாஸ்கோவைச் சுற்றி தாக்குதல் நடைபெற்ற சில பகுதிகளின் பெயரை ரஷிய பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடவில்லை.