ராதாபுரம் அருகே காப்பா் வயா் திருட்டு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தோட்டத்தில் காப்பா் வயரை திருடியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் குளப்புறத்தை அடுத்த மடத்துவிளையைச் சோ்ந்தவா் சிரில்(67). இவரது தோட்டம் ராதாபுரம் அருகேயுள்ள சௌந்தரபாண்டியபுரத்தில் உள்ளது. இங்குள்ள மோட்டாா் அறையில் காப்பா் வயா் கடந்த 12-ஆம் தேதி திருடுபோனதாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளா் சகாய ராபின் ஷாலு வழக்குப்பதிந்தாா். விசாரணையில், அதே ஊா் அந்தோணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆண்டோ டிக்சன்(19) என்பவருக்கு இந்தத் திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து காப்பா் வயரை மீட்டனா்.