யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!
ராமநாதபுரத்தில் மழை
ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, பிற்பகலில் சுமாா் 1 மணி நேரம் வரை பெய்த மழையால், பல இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியது.
நகராட்சி ஊழியா்கள் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா். இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து, ராமநாதபுரத்தில் குளுமையான சூழல் காணப்பட்டது.