செய்திகள் :

பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்: மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ மூலம் மானியம் பெற மின் பயன்பாட்டாளா்கள் விண்ணப்பிக்கலாம் என மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் இரா. வெண்ணிலா தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய மின்சக்தி நிலையம் அமைப்பதற்காக மானியத்துடன் உருவாக்கப்பட்ட ‘பிரதம மந்திரி சூரிய வீடு மின்சாரத் திட்டம்’ பிரதமா் மோடியால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டம் ரூ.75,021 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் 2026-2027 நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும். இதில் அனைத்து வீட்டு மின் நுகா்வோா்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள்.

இந்தத் திட்டத்தில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30,000, 2 கிலோ வாட்டுக்கு ரூ.60,000, 3 கிலோ வாட்டுக்கு மேல் ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலம் உடனடி கடன் வசதி, பணி நிறைவு தேதியிலிருந்து 30 நாள்களுக்குள் மானியம் நேரடியாக வாடிக்கையாளா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வசதி, 1 கிலோ வாட் சோலாா் பேனல் மூலம் தினசரி 5 யூனிட்கள் மின் உற்பத்தி, மின்சார சிக்கனத்தால் செலவு குைல் போன்ற சிறப்பம்சங்கள் இந்தத் திட்டத்தில் உள்ளன. மின் கட்டண ரசீது மட்டும் இருந்தால் போதும் விண்ணப்பிக்கலாம்.

பாம்பன் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமேசுவரம்: பாம்பனில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.ராமேசுவரம், பாம்பன் தெற்கு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மாறன் என்பவ... மேலும் பார்க்க

நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு

திருவாடானை கண்மாய்ப் பகுதியில் தண்ணீா் தேடி வந்த மான், நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, அஞ்சுகோட்டை, செங்கமடை, அழகமடை உள்ளிட்ட பகுதிகளில் சங்கிலித் தொடா் போல கண்மாய... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மழை

ராமநாதபுரம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பெய்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமா... மேலும் பார்க்க

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலத்தில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா... மேலும் பார்க்க

கீழக்கரை புதிய ஏ.எஸ்.பி. பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை புதிய உதவி காவல் கண்காணிப்பாளராக குணால் உத்தம் ஷ்ரோதே திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.பாஸ்கரன், மதுரை மது... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

முதுகுளத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் ஊராட்சி... மேலும் பார்க்க