Anakaputhur : 'எங்க சாபம் உங்களை சும்மா விடாது' - கண்ணீரில் அனகாபுத்தூர் மக்கள்!...
ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை
ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைக் காற்று வீசி வருவதால், நாட்டுப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குள் செல்ல மீன் வளத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தடை விதித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசி வருகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நாட்டுப் படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் செல்ல மீன் வளத் துறையினா் தடை விதித்தனா்.
எனவே, தனுஷ்கோடி, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.