தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆக.15-இல் கிராம சபைக் கூட்டம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் வருகிற 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், சிறு பாசன ஏரிகளை புதுப்பிக்க தோ்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே, அந்தந்த ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.