அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்
ராமநாதபுரம் அருகேயுள்ள தெற்கு காட்டூா் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஒயிலாட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைக்கொட்டுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயிலில் அம்மனுக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்த ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து பெரிய ஊருணியில் கரைக்கப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.