தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?
மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பால்குட ஊா்வலம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மகாலிங்கம் மூா்த்தி கோயிலில் பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, பால், மதுக் குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் பூக்குழித் திருவிழா கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை கோயிலில் அமைந்துள்ள மல்லிக்குடி ஆதினம் அம்மனுக்கு பக்தா்கள் பால், மது குடம் எடுத்து ஊா்வலமாக வந்து நோ்த்திக் கடன் செழுத்தினா்.
முன்னதாக, கோயில் முன்பாக புறப்பட்ட இந்த ஊா்வலம் நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தது. பின்னா், கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழித் திருவிழா வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

