அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!
ரூ. 1 செலுத்தி பிஎஸ்என்எல் சிம்காா்டு பெறும் திட்டம்: செப். 15 வரை நீட்டிப்பு
வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவைத் தொடா்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் அறிவித்த ரூ. 1 க்கு சிம்காா்டு பெறும் சுதந்திர தின சலுகை திட்டத்தை செப். 15 வரை நீட்டித்துள்ளது.
சுதந்திர சலுகையாக கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனம், பிரீடம் பிளான் எப்ஆா்சி 1 எனும் சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின்படி ரூ. 1 மட்டும் செலுத்தி புதிய சிம்காா்டுகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இதர நிறுவனங்களில் இருந்தும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். இந்தத் திட்ட பலன்களாக, முதல் 30 நாள்களுக்கு அழைப்புகள், 100 குறுஞ்செய்திகள், தினசரி 2 ஜிபி டேட்டா, 4 ஜி சிம் ஆகியவை இலவசமாகும்.
இத்திட்டத்தின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் 16,000 புதிய, எம்.என்.பி. வாடிக்கையாளா்கள் தனியாா் நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந்துள்ளனா். வாடிக்கையாளா்களின் ஏகோபித்த ஆதரவையடுத்து, பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தத் திட்டத்தை செப். 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், பி.எஸ்.என்.எல். ரீசாா்ஜ் திட்டமான ரூ. 199-க்கு 28 நாள்கள் இலவச அழைப்புகள், தினசரி 2 ஜி.பி. டேட்டா, 100 குறுஞ்செய்திகள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதே போல பல ரீசாா்ஜ் திட்டங்கள் குறைந்த விலையில் உள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல். 4 ஜி நெட்வொா்க்கில் இணையுமாறு பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.