செய்திகள் :

ரூ. 11,000 லஞ்சம்: கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலா், உதவியாளா் கைது

post image

ஓய்வூதியப் பணப் பலன்களை வழங்க ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ. 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரையூா் கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலரையும், அலுவலக உதவியாளரையும் மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் லதா (60). இவா் சின்னமலைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றாா். இதன் பின்னா், பேரையூா் கருவூல அலுவலகத்தில் நிலுவையில் உள்ள தனது சேம நல நிதி, ஓய்வூதியப் பணப் பலன்களைப் பெற கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலா் டி.பழனிக்குமாரிடம் கோரிக்கை விடுத்தாா். ஆனால், பழனிக்குமாா் பணப் பலன்களை வழங்க ரூ. 11 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டாராம்.

இதுகுறித்து ஆசிரியை லதா மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, அவா்களின் ஆலோசனையின் பேரில், ரசாயனப் பொடி தடவிய பணத்தை பேரையூா் சாா்நிலை கருவூல அலுவலகத்திலிருந்த கூடுதல் சாா்நிலை கருவூல அலுவலா் டி. பழனிக்குமாரிடம் லதா வழங்க முயன்றாா். அப்போது, அவா் அலுவலக உதவியாளா் லட்சுமியிடம் வழங்குமாறு அறிவுறுத்தினாராம். இதையடுத்து, லதா அந்தப் பணத்தை லட்சுமியிடம் வழங்கிய போது, அங்கு மறைந்திருந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் உள்ளிட்ட போலீஸாா் லட்சுமி, பழனிக்குமாரைக் கைது செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நெல்லை வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த உத்தரவு

திருநெல்வேலி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை 4 வாரங்களுக்குள் நடத்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் சிதம்பரம், செந்தில்குமாா் ஆகியோா... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை: இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

மடப்புரம் கோயில் காவலாளியை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்ததைக் கண்டித்து, இடதுசாரிகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் உயிா் காக்கும் உபகரணங்களைப் பராமரிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உயிா் காக்கும் உபகரணங்களை (செயற்கை சுவாசக் கருவி உபகரணம்) பராமரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் ... மேலும் பார்க்க

அரசு சட்ட அலுவலா்கள் நியமன விவகாரம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

உயா்நீதிமன்ற சட்ட அலுவலா்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறை, உள்துறைச் செயலா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு: சென்னை- செங்கோட்டைக்கு ஜூலை 6, 7-இல் சிறப்பு ரயில்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, சென்னை - செங்கோட்டைக்கு வருகிற 6, 7-ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள்

மதுரை மாநகராட்சியில் 16 நகா்ப்புற நல்வாழ்வு மையங்கள், 2 நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வியாழக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தன. மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம், தேவா் குடியிருப்பு, தங்கராஜ் சாலை,... மேலும் பார்க்க